திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:57 IST)

ஓடிப்போன மருமகள்...நாக்கை அறுத்துக்கொண்ட மாமியார்

ஜார்காண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர் லட்சுமி நிரலா. இவர் அங்குள்ள பகுதிகளில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம்தேதி இவரது மருமகள் ஜோதி குழந்தையுடன் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த நிரலா மற்றும் அவரது மகன் ஜோதியைப் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருமகளைக் காணவில்லை என்ற விரக்தியில் இருந்த லட்சுமி நிரலா தனது மருமகள் வீட்டிற்குத் திரும்ப வரவேண்டும் என நினைத்துக் கடவுளிடம் வேண்டிக்கொண்டு,  பிளேடால் தன் நாக்கை அறுத்துக் கொண்டால் அவர் திரும்ப வந்துவிடுவார் என யாரோ கூறியுள்ளனர். அதைக்கேட்டு அவரும் அப்படியே செய்துள்ளார்.

பின்னர் அவரது குடும்பத்தார் லட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இனிமேல் அவரால் பேச முடியாது என தெரிவித்துள்ளனர் இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.