திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 28 நவம்பர் 2020 (23:16 IST)

’’007 ’’என்ற ஜேம்ஸ் பாண்ட் கார் எண்ணை வாங்க பல லட்சம் செலவு செய்த நபர்…

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட ரசிகர்களுக்கு எப்போதும் 007 என்ற எண் மீது ஒரு கண் இருக்கும். இதை மெய்ப்பிக்கும் வகையில் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு நபர் ஆர்.டி.ஒ அலுவலத்தில் ஆஷின் என்ற நபர் ரூ.34 லட்சம் செலவு செய்து 007 என்ற எண்ணை ஏலத்தில் பெற்றுள்ளார்.

ஏற்கனவே கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வாழ்கின்றனர். வேலைவாய்ப்பும் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஆஷிக் படேல்( 28) என்ற இளைஞர், அங்குள்ள ஆர்.டி. ஒ அலுவலத்தில் 007 என்ற ஜேம்ஸ் பாண்ட் எண்ணை ரூ. 34 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இதற்குப் பலரும் விமர்சனம் தெரிவித்தாலும்கூட,  ஆஷிப் இது எனது லக்கி எண் என்று கூலாகப் பதில் சொல்லியுள்ளார்.