வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (19:01 IST)

நண்பனின் மனைவி மீது கள்ளக்காதல் ! நண்பன் கொலை.. குற்றவாளியை பிடித்த போலீஸ்..

தனது நண்பனின் மனைவி மீது காதல் ஒருவர், நண்பனைக் கொன்று விட்டு நாடகமாடினார். தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார்  குறிவைத்து குற்றவாளியைப் பிடித்துள்ளனர். 
கடந்த 24 ஆம் தேதி குல்கேஷ் தனது நண்பர் தல்பீரை அழைத்துக்கொண்டு, ஸகிரா ரயில்நிலையத்துக்கு அருகில் இருக்கும் தண்டவாளத்துக்கு அழைத்துச்சென்றதாகத் தெரிகிறது.அங்கு அவருடன் உரையாடிக்கொண்டிருந்த குல்கேஷ், அங்கிருந்த செங்கல்லை எடுத்து தல்பீரை அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் தல்பீரை  தண்டவாளத்தில் வீசிவிட்டு குல்கேஷ் சென்றுவிட்டார்.
 
இதனையடுத்து, போலீஸுக்கு குல்கேஷ் போன் செய்து, ஒருவரின் உடல் தண்டவாளத்தில் கிடைப்பதாகத் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதில் காவல்துறையினரை குழப்புவதற்காக, பல தில்லுமுல்லு வேலைகளை குல்கேஷ் செய்துள்ளார். பின்னர் போலீஸார் குல்கேஷ்தான் கொலையாளி என்பதைக் கண்டுபிடித்தனர்.
 
மேலும், தல்பீரின் போனை ஆய்வு செய்த பின்னர் குல்கேஷை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்  தன் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.குறிப்பாக தல்பீரின் மனைவி மீது ஏற்பட்ட கள்ளக்காதலால் தான் தல்பீரை கொன்று தண்டவாளத்தில் வீசிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போலிஸார் மேலும்  இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.