புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (14:04 IST)

மின்சாரத்தை உணவாக சாப்பிடும் அதிசய நபர்...

உத்தரப்பிரதேசத்தில் வாழும் ஒருவர் பசியெடுத்தால் மின்சாரத்தை தனது உடலில் செலுத்திக் கொள்ளும் அதிசய சம்பவம் அரங்கேறி வருகிறது. 


 

 
உத்தரபிரதேச மாநிலத்தின் முசாப் நகரை வசிப்பவர் நரேஷ்குமார் (42). மின்சார மனிதன் என அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படும் அவர் மின்சாரத்தை உணவாக உட்கொண்டு வரும் பழக்கத்தை பல வருடங்களாக கடைபிடித்து வருகிறார்.
 
ஒருமுறை அவரது உடலில் மின்சாரம் பாய்ந்த போது, அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம். அப்போதுதான் தனது உடம்பில் ஏதோ சக்தி இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார். பசியெடுக்கும் போது உணவு இல்லையெனில், கரண்டை தனது உடம்பில் 30 நிமிடம் செலுத்தினால், அவரின் பசி ஆறிவிடுமாம்.
 
சில சமயங்களில் பல்புகளை எரிய விட்டு, அதன் ஒயர்களை தனது வாயில் வைத்து கொள்கிறார். மேலும், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிஷ் மிஷின் உள்ளிட்ட அனைத்து வகையான மின்சார பொருட்களையும் வெறும் கையாலே தொடுவேன் என அவர் கூறுகிறார்.