திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜனவரி 2018 (17:15 IST)

முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்

புதிய விதிமுறைகளை வகுக்கப்படும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர்  செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. உச்சநீதிமன்றத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. வேறு வழியில்லாமல் எங்கள் கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்று அதிரடியாக தெரிவித்தனர்.
 
மேலும் வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்தனர்.  நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசாதாரன சூழலை சமரசமாக முடித்து வைப்பதற்காக, இந்திய பார் கவுன்சில் களம் இறங்கி அதிருப்திக்குள்ளாகியுள்ள நீதிபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் சிலர் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.