1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2020 (10:05 IST)

மேகாலயாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

மேகாலயாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவின் கிட்ட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரசால் இன்னும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதகுரிய செய்தி ஆகும் 
 
அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், மணிப்பூர், மிசோரம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகலாயாவில் இதுவரை உயிரிழப்பு ஏற்படாத மாநிலமாக இருந்தது. ஆனால் சற்று முன்னர் வெளிவந்த தகவலின்படி கொரோனா வைரஸால் இம்மாநிலத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
 
மேகாலயா மாநிலத்தில் உள்ள 69 வயதான மருத்துவர் ஒருவர் வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவர் சிகிச்சையின் பலன் இன்றி இறந்ததாக அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மாஅறிவித்துள்ளார். இதனை அடுத்து மேகாலயா மாநிலத்தில் கொரோனாவால் முதல் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது