1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 மே 2020 (08:39 IST)

முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதும், கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நுழைந்த கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கத்தினால் மத்திய அரசு நாடு முழுவதும் நான்கு கட்ட ஊரடங்கு அமல் படுத்தி வந்துள்ளது என்பதும் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்தபோதிலும் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் கடந்த நான்கு மாதங்களாக ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாமல் இருந்தது. அந்த மாநிலம்தான் சிக்கிம். இந்த நிலையில் தற்போது அந்த மாநிலத்திலும் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டது. ஆம், டெல்லியிலிருந்து சிக்கிம் வந்த 25 வயது மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிக்கிம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் அந்த மாணவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு மாதங்களாக கொரோனா இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் தற்போது கொரோனா நுழைந்திருப்பது அம்மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது