காதலியை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிய காதலன் ! பதறவைக்கும் வீடியோ
கர்நாடகாவில் காதலை முறித்துக்கொண்டதால், காதலியை நடுரோட்டில் வைத்துக் காதலன் அரிவாளால் வெட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் ஜூப்ளில் வசித்து வந்தனர் இஸ்மாயில். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷாவும் கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்தனர். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன் ஆஷா தனது காதலை முறித்துக் கொண்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்மாயில், இன்று காலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆஷாவை அரிவாள் க்ண்டு வெட்டினார்.
அப்போது, அங்கு வந்த இஸ்மாயில் அவரை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் , படுகாயம் அடைந்த ஆஷா மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இஸ்மாயிலைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.