திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (07:15 IST)

இரட்டை இலை யாருக்கு? தேர்தல் கமிஷனரை சந்திக்கின்றார் தம்பித்துரை

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா, அதிமுக ஓபிஎஸ் என இரண்டாக பிரிந்ததால் வரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.


 


நேற்று ஓபிஎஸ் அணியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் அணியில் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு சசிகலா அதிமுக சார்பில் தலைமை தேர்தல் கமிஷனரை தம்பித்துரை சந்தித்து இரட்டை இலை சின்னம் குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கின்றார்.

இருதரப்பு விளக்கங்களையும் கேட்டு 'இரட்டை இலை' சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் கமிஷன் வரும் 20ஆம் தேதிக்குள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.