மோடிக்கு 100 அடி சிலை, சாதனையை பாராட்டி கோவில்!!
பிரதமர் மோடியின் சாதனைகளை பாராட்டி அவருக்கு கோவில் ஒன்றை கட்டுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே இந்த கோவில் கட்டப்பட உள்ளது. இதை ஜே.பி.சிங் என்ற ஓய்வுபெற்ற என்ஜினீயரார் கட்டுகிறார்.
ஜே.பி.சிங் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். மோடியின் நடவடிக்கைகளும், அவரது வளர்ச்சி திட்டங்களும் ஜே.பி.சிங்-கை வெகுவாய் ஈர்த்துள்ளது.
எனவே, மோடிக்கு கோவில் கட்டுவது என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக 5 ஏக்கர் நிலத்தையும் வாங்கியுள்ளார். அந்த கோவிலில் மோடியின் 100 அடி பிரமாண்ட சிலை ஒன்றையும் அமைக்க உள்ளார்.
வரும் 23 ஆம் தேதி பூமி பூஜை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளார்.