தேசிய கட்சி தொடங்குகிறார் முதல்வர் சந்திரசேகரராவ்.. நாளை பெயர் அறிவிப்பா?
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாளை தேசிய கட்சியை ஆரம்பிக்க இருப்பதாகவும் நாளை கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற மாநில கட்சியை நடத்தி வரும் சந்திரசேகரராவ் நாளை தேசிய கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தேசிய அரசியலில் நுழைவது குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை செய்து வருவதாகவும் தனது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பெயரை மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
நாளை நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் தேசிய கட்சியின் பெயரை அவர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva