இரண்டு லாரிகளுக்கு இடையே நசுங்கிய கார் ; 5 பேர் பலி : அதிர்ச்சி வீடியோ
தெலுங்கானாவில் இரண்டு லாரிகளுக்கு இடையே ஒரு கார் சிக்கி அப்பளம் போல் நசுங்கும், மனதை பதற வைக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது.
நிஜாமாபாத்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கமரடி பைபாஸ் சாலையில், ஒரு சிக்னலில் நின்றிருந்த ஒரு காரும், லாரியும் சிக்னலை பார்த்து கிளம்ப, எதிரே வந்த லாரி நிற்காமல் செல்ல, அந்த கார் இரண்டு லாரிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டது.
இதில், அந்த காரில் பயணித்த ஐந்து பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அதில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடக்கம். விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போலீசார், ஜேசிபி எந்திரம் கொண்டு காரை மீட்டு அதில் இருந்த உடல்களை மீட்டனர்.
கார் விபத்தில் சிக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது பார்ப்பவர் மனதை பதற வைக்கிறது.
கொஞ்சம் பொறுமையாக சென்றால், உயிர் பலிகளை தடுக்கலாம் என்பதை அந்த வீடியோ நமக்கு புரிய வைக்கிறது.