1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 மார்ச் 2018 (19:41 IST)

தேசிய அளவில் மூன்றாவது கட்சி உருவாக்கம்: தெலங்கானா முதல்வர் பேச்சு...

தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  வலியுறுத்தி உள்ளார். 
 
மேலும், அவர் மாநில நலன்களை முன்வைத்து தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இவரது இந்த கருத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார். 
 
இது குறித்து தெலங்கானா முதல்வர் விரிவாக கூறியதாவது, உண்மையான கூட்டாட்சி நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாநில நலன்களில் அடிப்படையிலான ஓரு தேசிய கோள்கை உருவாக்க தேவை உருவாகியுள்ளது. 
 
மற்ற நாடுகள் வளர்ச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கும்போது இந்தியாவில் அடிப்படை தேவைகளை கூட  நிறைவேற்றமுடியாத நிலை தொடர்வதாகவும் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார்.