75% சம்பளத்தை கறாராக பிடித்த அரசு: காரணம் என்ன??

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 31 மார்ச் 2020 (16:14 IST)
கொரோனா பாதிப்பு நிதியாக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 75% பிடிக்கப்படும் என தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,092 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 7,89,240 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,66,506 பேர் குணமடைந்துள்ளனர். 
 
இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை தொடர்ந்து அமெரிக்கா அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.  இதனால் இந்திய மாநிலங்கள் பல பொருளாதார நிலையில் கடும் சரிவை கண்டுள்ளது. 
 
எனவே, நிதி நெருக்கடியை சரிக்கட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை குறைக்க தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் வெளியிட்டுள்ளார்.
 
1. முதல்வர், மாநில அமைச்சரவை, எம்.எல்.ஏ, எம்பி, மாநில கூட்டுத்தாபனத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 75% குறைப்பு 
2. மத்திய சேவை அதிகாரிகளுக்கு 60% சம்பளக் குறைப்பு
3. மற்ற அனைத்து வகை ஊழியர்களுக்கும் 50% சம்பளக் குறைப்பு 
4. நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 10% ஊதியக் குறைப்பு 
5. ஓய்வூதியதாரர்களின் அனைத்து வகைகளுக்கும், 50% ஊதியக் குறைப்பு 
6. நான்காம் வகுப்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சம்பளத்தில் 10% குறைப்பு 
7. பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசாங்க மானிய ஊழியர்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 10% குறைப்பு 


இதில் மேலும் படிக்கவும் :