திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 6 நவம்பர் 2016 (16:27 IST)

கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து: 15 வயது சிறுமியை சீரழித்த 7 வெறியர்கள்!

கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து: 15 வயது சிறுமியை சீரழித்த 7 வெறியர்கள்!

டெல்லியில் 15 வயது சிறுமியை சிமாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி காதலன் ஒருவன் குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
டெல்லி பஹர்கஞ் பகுதியில் ரேஹன் என்ற 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரது காதலன் அவரை சினிமாவுக்கு அழைத்து செல்வதாக வெளியே கூட்டி சென்றுள்ளார். ஆனால் சினிமாவுக்கு அழைத்து செல்லாமல் சிறுமி ரேஹனை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளான் அந்த காதலன்.
 
அந்த ஹோட்டல் அறையில் காதலனின் நண்பர்கள் 6 பேர் இருந்துள்ளனர். சிறுமிக்கு குளிர் பாணத்தில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்து சிறுமியை மயக்கம் அடைய வைத்துள்ளனர்.
 
பின்னர் ஒருவர் பின் ஒருவராக அந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காதலனுடன் சேர்த்து 7 பேரும் தன்னை மாறி மாறி பலாத்காரம் செய்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.