செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (14:36 IST)

23 பேரால் இரண்டு நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

23 பேரால் இரண்டு நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை காரில் வந்த இரண்டு இளைஞர்கள் கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டு மேலும் பலருக்கு அந்த இளம்பெண்ணை விருந்தாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர், தான் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்வையிட்டுவிட்டு தனது வீட்டுக்கு திரும்ப செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணை காரில் கடத்தியுள்ளனர்.
 
காரில் வைத்தே அந்த பெண்ணை இளைஞர்கள் இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் ராஜஸ்தானின் புறநகர் பகுதியில் இருக்கும் அரசு மின்வாரிய பகுதிக்கு அழைத்து சென்று வேறு ஒரு ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.
 
பின்னர்  அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று இரண்டு நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணை கடத்திய இடத்துக்கு கடந்த செவ்வாய் கிழமை அதிகாலையில் கொண்டுவந்து விட்டு சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை 23 பேர் தொடர்ந்து இரண்டு நாட்கள் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இந்த புகாரை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.