1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (12:16 IST)

மாணவிகளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து உல்லாசமாக இருக்கும் ஆசிரியர்: புகைப்படங்களால் அதிர்ச்சி!

மாணவிகளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து உல்லாசமாக இருக்கும் ஆசிரியர்: புகைப்படங்களால் அதிர்ச்சி!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுடன் மிகவும் நெருக்கமாக ஆபாசமாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அஸ்ஸாம் மாநிலம் ஹைலக்கண்டி மாவட்டத்தில் உள்ள மாடல் என்ற மேல்நிலைப்பள்ளியில் ஃபைசுதின் லஸ்கர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் தான் பாடம் எடுக்கும் மாணவிகளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
 
மாணவிகளை கட்டிப்பிடித்து, நாற்காலியில் காட்டியணைத்தவாறு தவறாக உட்கார வைத்து, முத்தம் கொடுத்து என பல புகைப்படங்கள் எடுத்துள்ளார் இந்த ஆசிரியர். மேலும் இந்த ஆபாச புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.


 
 
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த ஆசிரியருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவிகளுடன் தவறாக இருந்தது மட்டுமல்லாமல் அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அந்த ஆசிரியருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
 
இந்த புகைப்படங்கள் வெளியானதை அடுத்து காவல்துறையினர் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அந்த ஆசிரியருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.