திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2019 (12:34 IST)

கீரை சாப்பிட்ட ஆசிரியை, மாரடைப்பால் இறந்த துயர சம்பவம்..

வில்லியனூரில் கீரையும் மோர் சாதமும் சாப்பிட்ட ஆசிரியை, மாரடைப்பு வந்து பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் ஆசிரியர் பட்டபடிப்பு முடித்துள்ளார். இவருக்கு வயது 28. இந்நிலையில் மதியம் ஆர்த்தி, கீரை மற்றும் மோர் சாதம் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறுது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஆர்த்தியை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆர்த்தி இறந்துவிட்டதாக கூறினர். இதை தொடர்ந்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில், நூடுல்ஸ் சாப்பிட்டு சுங்க சாவடி ஊழியர் ஒருவர் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து நேற்று முந்தினம் நண்டு குழம்பு சாப்பிட்ட சின்ன காலாப்பட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மாரடைப்பால் இறந்து போனார். தற்போது கீரையும் மோர் சாதமும் சாப்பிட்ட பட்டதாரி ஆசிரியை ஒருவர் மாரடைப்பால் இறந்துள்ளது, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.