1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 அக்டோபர் 2018 (11:02 IST)

ஆசிரியர் செல்போன் பறிப்பு: மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்

ஆசிரியர் மாணவனின் செல்போனை பறித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
 
இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் மனிதர்களின் உடலில் உள்ள ஒரு உடல் உறுப்பு போன்று ஆகிவிட்டது. காலையில் எழுந்து கையில் எடுக்கும் செல்போனை இரவு தூங்கும் வரை கீழே வைப்பதில்லை. அப்படி இன்று செல்போன் மக்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய அங்கமாகிவிட்டது.
 
கேரள மாநிலம் குமரன்நல்லூரை சேர்ந்தவர் ஜெயன். இவரது மகன் ஜிஷ்ணு(17), அங்குள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
 
இந்நிலையில் ஜிஷ்ணு சமீபத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்போனை எடுத்துச்சென்றான். மாணவனின் செல்போனைக் கண்ட ஆசிரியர் அவனின் செல்போனை பறித்துக் கொண்டு பெற்றோரை வரச்சொன்னார்.
 
இதனால் மனமுடைந்த ஜிஷ்ணு, வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். செல்போனால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.