1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 7 மே 2016 (16:37 IST)

டீ விற்பவரின் மகன் என்பதால் பள்ளியிலிருந்து மாணவனை நீக்கிய நிர்வாகம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் டீ விற்பவரின் மகன் என்ற காரணத்தால் மாணவனை நீக்கிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

 


உத்தரப் பிரதேச மாநிலம், பக்பட் மாவட்டத்திற்கு உட்பட்ட பரவுட் பகுதியில் சுவாமி மஹாவீர் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் அரிஹந்த் ஜெயின்.
 

இவரது தந்தை டீ வியாபாரம் செய்பவர் என்பது பள்ளி நிர்வாத்திற்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்கி பள்ளி நிர்கம் நடவடிக்கை எடுத்து.


இது குறித்து தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளர் தலைமையில் குழுவை அமைத்து பக்பட் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

மாணவன் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.