திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (10:40 IST)

சபாநாயகர் அறையில் தூங்கிய ராஜினாமா செய்ய போன எம்பி: வைரல் புகைப்படம்

எம்பி பதவியை ராஜினாமா செய்ய போன தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சபாநாயகர் அறையில் இல்லாததால் அவரது அறையில் தூங்கியது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி எம்பிக்கள் நேற்று சபாநாயகரின் அறைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சென்ற சமயத்தில் சபாநாயகர் அறையில் இல்லை. இதனால் அவரது அறையிலேயே தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் தெலுங்குதேச எம்பிக்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஒரு எம்பி சபாநாயகர் அறையில் தலையணை எடுத்து தலைக்கு வைத்து தூங்க தொடங்கிவிட்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.