அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை: டிசிஎஸ் உள்பட 3 நிறுவனங்கள் அறிவிப்பு!

TCS
அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை: டிசிஎஸ் உள்பட 3 நிறுவனங்கள் அறிவிப்பு!
siva| Last Updated: திங்கள், 19 ஜூலை 2021 (18:02 IST)
அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக டிசிஎஸ் உள்பட 3 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படித்து முடித்த இளைஞர்கள் பலருக்கு வேலை இல்லாமல் உள்ளது. ஏற்கனவே வேலை பார்த்துக் வருபவர்களுக்கும் வேலை உறுதித் தன்மை இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து அடுத்த ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்க இருப்பதாக டிசிஎஸ் இன்போசிஸ் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான வர்த்தகங்கள் தற்போது கிடைப்பதாகவும் அதன் காரணமாக கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதனை அடுத்து இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசிஎஸ் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனங்களில் வேலை கிடைத்தால் மிகப் பெரிய தொகை சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :