சுஸ்மா சுவராஜ்க்கு சிறுநீரக மாற்று சிகிச்சை


Abimukatheeesh| Last Updated: சனி, 10 டிசம்பர் 2016 (14:02 IST)
இன்று டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.

 

 
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார்.
 
அவருக்கு சிறுநீரகம் செயலலிழந்ததால் மாற்று அறுவை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி சுஸ்மா சுவராஜ் இன்று டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை செய்து கொள்கிறார்.
 
இவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய ஏராளமானோர் முன்வந்தன. அண்மையில் ஒரு இளைஞர், நான் சுஸ்மாவுக்கு சிறுநீரகம் தானம் செய்ய விருப்பப்படுகிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
 
அந்த பதிவு எல்லோரிடமும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது சிகிச்சை குறித்து ஏய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாவது: 
 
சுஸ்மாவுக்கு சிறுநீரகம் வழங்க, மருத்துவமனையில் வெள்ளம் போல் வாய்ப்புகள் குவிந்துள்ளது, என்று தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :