1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (12:17 IST)

அது மாஸ்க்கா? தாடியா? குழப்பமடைந்த வெங்கையா நாயுடு! – வைரலாகும் வீடியோ!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடிகர் சுரேஷ்கோபியிடம் தாடி குறித்து வெங்கையா நாயுடு விசாரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த வாரம் முதலாக நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்கள், விளக்கங்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வைரலாகி வருகிறது.

மலையாள நடிகரும், கேரள பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி மாநிலங்களவையில் தனது உரையை வழங்க தயாரானர். புதிய கெட்டப்பில் வந்திருந்த அவரை கண்டு குழம்பிய அவை தலைவர் வெங்கையா நாயுடு அவரிடம் “நீங்கள் வெள்ளை மாஸ்க் அணிந்துள்ளீர்களா அல்லது அது தாடியா?” என இந்தியில் கேட்டார்.

அதற்கு சுரேஷ் கோபி, இது தாடிதான் என்றும், தனது புதிய படத்திற்காக இந்த ஸ்டைலில் தாடி வைத்திருப்பதாகவும் விளக்கமளித்தார். இந்த சம்பவத்தால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.