1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 25 ஜூன் 2016 (15:22 IST)

இந்தியாவில் வாட்ச் ஆப்-பிற்கு தடை? - தீவரவாதிகள் அச்சுறுத்தல் காரணமா!

வாட்ஸ் அப்-பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
 

 
ஜார்கண்ட்டைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுதிர் யாதவ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ’வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் தகவல்களை என்கிரிப்ட் செய்வதால் தீவிரவாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் உதவும் வகையில் உள்ளது.
 
இந்த செயலிகளில் இடைமறித்து தகவல் பெறுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. தற்போது வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள 256 பிட் என்கிரிப்ட் எனப்படும் ஒரு சங்கேத குறியீட்டை இடைமறித்து கண்டுபிடிக்க 100 ஆண்டுகள் கூட ஆகலாம்.
 
எனவே, வாட்ஸ் அப், வைபர், டெலிகிராம், ஹைக் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால், இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.