1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (11:26 IST)

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என சற்று முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன் இந்த தீர்ப்பை வழங்கிய நிலையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக நான்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வந்த நிலையில் அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
 
தேர்தல் பத்திரங்கள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டது சட்டவிரோதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்றும் கருப்பு பணத்தை ஒழிக்க இது கண்டிப்பாக உதவாது என்றும் தகவல் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran