வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By ashok
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2015 (15:04 IST)

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிராக தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், ஜெயலலிதாவின் ஆட்சி குறித்தும் அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்காக சுப்பிரமணியின் சுவாமி மீது  தமிழக அரசு சார்பில் 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து சுப்பரமணியன் சுவாமி இந்த வழக்கை விசாரிக்க தடைவிதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில், அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி இடைக்கால மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 3 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் அவதூறு வழக்கு தொடர வழிவகை செய்யும் இந்திய சட்டப்பிரிவு 500,499 ஆகிய பிரிவுகளை ரத்த செய்ய கோரிக்கை மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.