வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:03 IST)

பேஸ்புக்குக்கும் ஆதார் கார்டா ? – முக்கிய வழக்கை ஏற்ற உச்சநீதிமன்றம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்க ஆதார் கார்டு அவசியம் எனத் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதித்துள்ளது.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிதாகக் கணக்குகள் தொடங்க ஆதார் கார்டு அவசியம் என்று கோரி இந்தியாவின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அனைத்து வழக்குகள் சம்மந்தமாக பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதனை உச்சநீதிமன்றம் நேற்று ஏற்றுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தாக்கல் செய்த் மனுவில் ’வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஒரே கோரிக்கையையே வலியுறுத்துவதால் அதை ஒரே வழக்காக உச்சநீதிமன்றமே ஏற்று விசாரிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்குத் தடைவிதிக்க முடியாது என மறுத்துள்ளது.