திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (17:33 IST)

610 வாக்குகளில் நடிகையிடம் தோல்வி அடைந்த முதல்வரின் மகன்!

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நடிகை சுமலதாவிடம் கர்நாடக மாநில முதல்வரின் மகன் நிகில் குமாரசாமி வெறும் 610 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும் தமிழ், கன்னட நடிகையுமான சுமலதா, கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக இந்த தொகுதியில் போட்டியிடவில்லை
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த தொகுதியின் முடிவு வெளியானது. இதன்படி சுமலதாவிற்கு 1,22,924 வாக்குகளும், நிகில் குமாரசாமி 1,22,344 வாக்குகளும் கிடைத்துள்ளது. இதனால் நடிகை சுமலதா வெறும் 610 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.