பீகார் வெற்றி: நிதீஷ்குமாருக்கு வைகோ வாழ்த்து


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 10 நவம்பர் 2015 (02:25 IST)
பீகார் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 
இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் , இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான மதச் சார்பின்மையை பாதுகாக்கும் ஒளி விளக்காக உங்களின் வரலாற்று புகழ் மிக்க தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இந்த வெற்றிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உங்களது வெற்றி, எங்களது தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை விதைத்துள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று, லாலு பிரசாத் யாதவுக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :