1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (15:34 IST)

ராமர் கோவில் பணி என்னை வியக்க வைக்கிறது.. அயோத்தி சென்ற சுப்பிரமணியன் சுவாமி

subramaniya swamy
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் இந்த கோவிலுக்கு ஏராளமான பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பது தெரிந்தது.

பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் ராமர் கோவில் திறப்பு நாளில் வழிபட்ட நிலையில் தற்போது பாஜகவின் மூத்த தலைவர்  சுப்பிரமணியன்    சாமி நேற்று அயோத்தி சென்று ராமர் கோவிலில் தரிசனம் செய்தார்.

அதன்பின் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த போது அயோத்தியில் ராமர் சிலையை அருகில் இருந்து பார்த்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அவர்களின் திறமையான வழிகாட்டுதலால் ராமர் கோயில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பணி என்னை வியக்க வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக மீது கடுமையாக விமர்சனம் செய்து வரும் சுப்பிரமணியம் சாமி ராமர் கோயில் கட்டுமானத்தை பாராட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva