1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (12:05 IST)

ஜனாதிபதி பதவிக்கு பிட்டு போடும் பொருக்கி புகழ் சு.சுவாமி!!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த ஜனாதிபதியஒ தேர்வு செய்ப்வதில் தீவிரம் காட்டி வருகிறது மோடி அரசு. 


 
 
ஜனாதிபதி பதவிக்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட சிலரும் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்நிலையில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்  சுப்பிரமணியன் சுவாமி. 


 

 
அதோடு தமக்கும் ஜனாதிபதி ஆசை இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது, "ஜனாதிபதி பதவிக்கான சிறந்த வேட்பாளர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலும் ஒருவர். அவர் குஜராத்தியாக இருந்தால் என்ன? நான்கூட குஜராத்தின் மருமகன்தான்" என்று பதிவிட்டுள்ளார்.