1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (15:07 IST)

19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை; ஃபேஸ்புக் லைவ் வீடியோவை நீக்கிய போலீஸார்

தேர்வுகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவர் மும்பையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 


 

 
பெங்களூரைச் சேர்ந்த அர்ஜூன் பரத்வாஜ் என்ற இளைஞர் மும்பையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். தேர்வுகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார்.
 
இதில் மனமுடைந்த அவர் நேற்று மாலை 6.30 மணியளவில் 19வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஓட்டல் ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர்.
 
இதையடுத்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். மேஜையில் தற்கொலை கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தன்னை பெற்றோர் மன்னிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் தற்கொலை செய்துக்கொள்ளும் முன் பேஸ்புக் லைவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் நாள் முழுவதும் மது அருந்தியதோடு, புகைப்பிடித்தது வீடியோவில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை மும்பை காவல்துறையினர் நீக்கியதோடு, அதனை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.