டிசி கொடுக்காததால் ஆத்திரம்: தீ வைத்து கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவர்!
டிசி கொடுக்காத ஆத்திரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப் பிடித்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஐதராபாத்தைசேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடைய டிசியை கொடுக்குமாறு கல்லூரி முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் கல்வி கட்டணம் கட்டவில்லை என்றும் கல்வி கட்டணம் கட்டிய பின்னர் தான் டிசி கொடுக்க முடியும் என்று கல்லூரி முதல்வர் கறாராக கூறியுள்ளார்.
இதனை அடுத்து தன் கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட அந்த மாணவர், கல்லூரி முதல்வரை கட்டி பிடித்து உள்ளார். இதனால் கல்லூரி முதல்வர் அலறலைக் கேட்டு அறிந்த ஆசிரியர்கள் இருவர் மீது கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க முயற்சித்தனர். இதில் ஒரு ஆசிரியருக்கு தீ காயம் ஏற்பட்டதாக தெரிகிறது
இந்த நிலையில் தீக்காயம் அடைந்த மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தன்னுடைய டிசியை முதல்வர் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என போலீசாரிடம் மாணவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்