திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:29 IST)

ரயிலில் சிக்கிய மாணவி மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்!

student
ரயிலில் சிக்கிய மாணவி மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்!
ரயிலில் சிக்கிய மாணவி ஒருவர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் ரயிலில் பயணம் செய்த மாணவி ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழும் போது தவறி விழுந்து விழுந்து விட்டார். ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கிக் கொண்ட நிலையில் அந்த மாணவியை மீட்க மீட்பு படையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் போராடினர்
 
ஒன்றரை மணிநேரம் போராடிய அந்த மாணவியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அவருடைய உள் உறுப்புகள் செயல் இழந்ததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்
 
ரயிலில் சிக்கி உயிரிழந்த மாணவியின் பெயர் சசிகலா என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பல மணி நேரம் போராடி மாணவியை மீட்டும், அம்மாணவி மரணம் அடைந்த சம்பவம் ரயில்வே துறை அதிகாரிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
 
Edited by Mahendran