வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (18:43 IST)

தமிழகத்திற்கு தண்ணீர் : உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு : கர்நாடகாவில் பந்த்

தமிழகத்திற்கு தண்ணீர் : உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு : கர்நாடகாவில் பந்த்

தமிழகத்திற்கு, கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக்கூடாது என்று கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற 9ஆம் தேதி முழு அடைப்புக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.



தமிழகத்திற்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம், பத்து நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அங்குள்ள பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தினர்.

அதேபோல், சில அமைப்பினர், கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்றனர். அவர்களில் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினர். இறுதியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று வலியுறுத்தி வருகிற 9ஆம் தேதி மாண்டியா மாவட்டம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.