வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (10:56 IST)

தெரு நாய்களுக்கு இரையான 82 வயது மூதாட்டி.. பசிக்கு கடித்து தின்ற கொடுமை..!

Street Dogs
82 வயது மூதாட்டி வீட்டு வாசலில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தெரு நாய்கள் அந்த மூதாட்டியை கடித்து தின்ற கொடூரம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக படுத்த படுக்கையாய் 82 வயது மூதாட்டி இருந்த நிலையில் அவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தெரு நாய்கள் கும்பலாக திடீரென அவரை சுற்றி வளைத்து உடலின் சில பாகங்களை கடித்து தின்று இருக்கின்றன.

கிட்டத்தட்ட பாதி உடல் தெருநாய்களால் கடித்து தின்று விட்டதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்த போது தெரு நாய்கள் கூட்டமாக அவரை சுற்றி கடித்து தாக்கி இருப்பதாகவும் மூதாட்டியின் சில பாகங்களை நாய்கள் தின்று இருப்பதாகவும் பின்னர் அவரது உறவினர்கள் சில மணி நேரம் கழித்துதான் சடலமாக கண்டெடுத்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து தெரு நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெலுங்கானா மாநில அரசுக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran