ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (11:57 IST)

அயோத்தி ராமர் கோவிலுக்கு இலங்கையிலிருந்து கல்! – வரலாற்று பின்னணி என்ன?

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் அதில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட கல் பயன்படுத்தப்பட உள்ளது.

அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டு நிதி வசூலிக்கப்பட்ட நிலையில் கோவில் கட்டுமான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானத்தில் இடம்பெற்றுள்ள இலங்கை கல் விஷேச கவனம் பெற்றுள்ளது.

ராமாயண இதிகாசப்படி ராவணன் சீதயை இலங்கையில் சிறைபிடித்து வைத்திருந்த பகுதி சீதா எலியா என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து மண், கல், ஆறுகளில் இருந்து நீர் ஆகியவை கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் சீதா தேவை சிறைபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து பிரத்யேகமாக எடுத்து வரப்பட்டுள்ள கல் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.

தாமாக முன் வந்து இந்த கல்லை ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ள இலங்கை இதனால் இருநாட்டு உறவுகளும் வலுவடையும் என கருத்து தெரிவித்துள்ளது.