வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (13:32 IST)

இன்றே கடைசி? கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு கெடு!!

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
 
கர்நாடகவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாதம் கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
 
எனவே இன்னும் இன்று 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? அல்லது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது தெரிந்துவிடும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.