புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (10:12 IST)

சில கோழைகள் என்னை தடுக்கிறார்கள்: பிரகாஷ்ராஜ் காட்டம்

சில அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மக்களை சந்திக்க விடாமல் எங்களை தடுக்கிறார்கள் என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
 
சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவ்வப்போது டுவிட்டரில் பிரதமருக்கு எதிரகாகக் கருத்து தெரிவித்து வந்தார்.
 
இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கூறினார். தனியாக ஒரு குழுவை அமைத்து அன்றாடம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதற்கிடையே பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், பெங்களூருவில் சாந்தினி நகரில் பிரசாரத்தை தொடங்கிய தங்களை சில அரசியல் கட்சிகள் தடுத்தனர். கோழைகள் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் என்பதை இந்த விஷயம் காண்பிக்கிறது. நாங்கள் பயப்படுபவர்கள் அல்ல. தொடர்ச்சியாக எங்களின் பயணத்தை தொடர்வோம் என அவர் கூறியிருக்கிறார்.