1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 29 மே 2016 (06:40 IST)

டெல்லியில் புகை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது

டெல்லியில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ: 200 அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
தூய்மை பாரதம்” என்ற பொது இடங்களை தூய்மை செய்தல் திட்டம் நாடுமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலங்களிலும், தன்னார்வ தொண்டு நிறுனங்களிலும், வீடுகளிலும், காடுகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் அனைத்து மக்களும் தானே சுத்தம் செய்ய வேண்டும் என்பதை அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தானே முன்வந்து இத்திட்டத்தை செயல்பாட்டில் கொண்டு வந்துகொண்டுள்ளனர்.
 
இத்திட்டத்தின் விரிவாக்கமாக நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிப்ப்து தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ: 200 அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லிடில் 2003-ம் ஆண்டின் சட்டப்படி சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மற்றும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதை மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் பி.காமராஜ் தெரிவித்தார்.