திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (09:10 IST)

3 நாய் குட்டிகளை உயிருடன் எரித்த சிறுவர்கள் (வீடியோ)

3 நாய் குட்டிகளை உயிருடன் எரித்த சிறுவர்கள் (வீடியோ)

ஹைதராபாத்தில் 3 நாய் குட்டிகளை சிறுவர்கள் ஒன்று சேர்ந்து உயிருடன் தீயில் எரித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஹைதராபாத் முஷீர்பாத் பகுதியில் கடந்த 16ஆம் தேதி 3 சிறுவர்கள் தெருவில் தீ மூட்டி, அதில் உயிருடன் 3 நாய் குட்டிகளை வீசினர். 
 
இந்த கோடூர சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக ப்ளூ கிராஸ் அமைப்பு அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் சந்தேகத்தில் 5 சிறுவர்களை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
 

நன்றி: WATCHH DOGG