1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (13:05 IST)

தலித்துகள் முன்னேறாதவரை நாடு வளர முடியாது - சீத்தாராம் யெச்சூரி

தலித்துகளின் வாழ்க்கைத் தரம் முன்னேறாதவரை நாட் டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
 
தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பில் தலைநகர் புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், “தலித்துகள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டுமானால், அவர்களின் பொருளாதார நிலைமை மேம்படுத்தப்பட வேண்டும். சமூக ஒடுக்குமுறையும், பொருளாதார ஒடுக்குமுறையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும்.
 
சமூக சமத்துவமின்மையை சரிசெய்வதற்கான சவாலை நாம் ஏற்றுக் கொண் டாக வேண்டும். தலித்துகளின் போராட்டங் களில் செங் கொடி இயக்கம் எப்போதும் துணை நிற்கும். தலித்துகளின் மேம்பாட்டிற்காக உழைத்திட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பலரின் செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அங்கீகரித்து வந்திருக்கிறது.
 
முதுபெரும் தலித் தலைவரான அம்பேத்கருக்கு இப்போது நாடே அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. தலித்துகளின் பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்துத் தீர்வு காண நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.