திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 மார்ச் 2018 (14:03 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் பாஜகவே பொறுப்பு - மல்லுக்கட்டும் சித்தராமய்யா

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா கருத்து தெரிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த கெடுவும் இன்றோடு முடிவடைகிறது. ஆனால், மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம், உச்ச நீதிமன்றம் கூறிய ‘திட்டம்’ என்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு வருகின்ற சனிக்கிழமை மத்திய அரசு சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது.  
 
உச்ச நீதிமன்றம் அளிக்கும் விளக்கத்திற்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. மேலும், கர்நாடகாவில் வருகிற மே 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரைக்கும் இந்த விவகாரத்தை தள்ளிப்போடவே மத்திய அரசு விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி இன்று கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமய்யா “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது. மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதில் மேற்பார்வைக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மாநில உரிமைகள் பறிக்கப்படும். அதையும் மீறி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு மத்திய பாஜக அரசுதான்” என அவர் பேட்டியளித்துள்ளார்.