வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (20:01 IST)

மேகதாது அணையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது: மோடியை சந்தித்த பின் சித்தராமையா பேட்டி

எங்கள் பிராந்தியத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளோம். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
 
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடக அனைத்துக்கட்சி தலைவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர், இதுபற்றி ஆய்வு செய்வதாக கூறியுள்ளார்.
 
பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், மேகதாது அணை கட்ட அனுமதிக்கும்படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் பிராந்தியத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ளோம். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீர் தொடர்ந்து வரும். ஆனால், இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கம் கொண்டது, என்று தெரிவித்தார். தீர்ப்பாயம் கூறியபடி தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.