வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஜூலை 2018 (15:47 IST)

குமாரசாமிக்கு சிறந்த நடிகருக்கான விருது: மஜதவை கவுரவித்த பாஜக!

கர்நாடக முதல்வர் குமாரசாமி பொது மேடையில் கதறி அழுத சம்பவத்தை கவந்த்தில் கொண்டு கர்நாடக மாநில பாஜக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்குவதாக கேலிசெய்துள்ளது. 
 
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற குமாரசாமி, சமீபத்தில் விவசாயிகளின் 34,000 கோடி கடன்களை அதிரடியாக தள்ளுபடி செய்தார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குமாரசாமி, மங்களூருவில் போராட்டம் நடத்திய பெண்கள் சிலர், தங்களுக்கான முதல்வர் குமாரசாமி அல்ல என கோஷமிட்டனர். 
 
இது குறித்து பேசிய அவர், இது எனது மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. நான் நாட்டு மக்களுக்கு நிறைய நல்லது செய்ய விரும்புகிறேன். ஆனால் மக்கள் இப்படி என்னை விமர்சிப்பது கஷ்டமாக் இருக்கிறது என தொடர்ந்து பேச முடியாமல் கதறி அழுதார். 
 
பின்னர் தன்னை ஆசுவாசப்பத்தி கொண்டு பேசத் தொடங்கிய அவர் எனது சுய மரியாதையை விட்டுக் கொடுக்கும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பதவியை தூக்கி எறிவேன் என்றார். இந்நிலையில், இந்த நிகழ்வை விமர்சிக்கும் வகையில் பாஜக சார்பில் டிவிட் ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது. 
 
அதில், நமது தேசம் பல நடிகர்களை உருவாக்கி வருகிறது. அவர்களை மக்களை தங்களது நடிப்பால் மயக்கி வருகின்றனர். தற்போது குமாரசாமி என்னும் புதிய நடிகர் உருவாகியுள்ளார். இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.