இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர், நாம் பாரதியர்கள்: சேவாக்
இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்றும் பாரதம் என்பதுதான் நமது கலாச்சார பெயர் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூரிய போது ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நான் பாரதியார்கள்.
இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத் என்ற பெயரை அதிகாரபூர்வமாக திரும்ப பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.
பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்,. இந்த உலக கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் எழுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva