1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:55 IST)

இளைஞர்கள் சிங்கிளாக திரிவதற்கு பாஜகவே காரணம்!? – சரத்பவார் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிராவில் இளைஞர்கள் வேலையின்றி, திருமணமாகாமல் திரிவதற்கு பாஜகதான் காரணம் என சரத்பவார் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது பாலசஹெபஞ்சி சிவ சேனா – பாஜக கூட்டணியிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்து வருகிறார். முன்னர் சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ‘ஜன் ஜகார் யாத்ரா’ என்ற மாநிலம் தழுவிய யாத்திரை நடைபெறுகிறது.

அதை தொடங்கி வைத்து பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்பவார் “நான் வெளியே சுற்றுப்பயணம் செல்லும்போது கிராமங்களை பார்வையிடுவது வழக்கம். அவ்வாறு நான் செல்லும் ஒவ்வொரு கிராமத்திலும் 15, 20 இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை நான் விசாரித்தபோது பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதாக கூறுவார்கள்.

திருமணமாகி விட்டதா என கேட்டால், வேலை இல்லாததால் யாரும் பெண் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவில் பெரும்பான்மை கிராமங்களில் இந்த நிலைமைதான் உள்ளது. நாட்டி படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்க, பாஜக இரு மதங்களுக்கிடையே வெறுப்பை தூண்டி அரசியல் செய்கிறது. வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின் மாயமாகி விடுகின்றன” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K