ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன் - அதிர்ச்சி செய்தி


Murugan| Last Updated: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)
ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய இளைஞர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டு எனும் பகுதியில் ஒரு ஆதரவற்றோர் விடுதி செயல்படுகிறது. அதில் ஏராளமான சிறுமிகள் தங்கியுள்ளனர். 
 
சம்பவத்தன்று, அந்த விடுதிக்கு அருகில் இருக்கும் பெட்டிக் கடையிலிருந்து ஒரு சிறுமி சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்துள்ளார். இதைக் கண்ட விடுதி வார்டன், அந்த சிறுமியிடம் விசாரித்த போது, அந்த பெட்டிக்கடைக்காரர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. மேலும், தன்னோடு சேர்த்து மொத்தம் 7 சிறுமிகளை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என அந்த சிறுமி கூறியுள்ளார்.
 
இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
 
சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 
 
இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :