திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (23:16 IST)

சீடராக வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் மீது புகார்

இந்தியாவில் சாமியார்கள் மீது அவ்வப்போது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் மீது அவரது சீடர்களில் ஒருவரான இளம்பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
டெல்லியில் ஆசிரமம் ஒன்றை நடத்தி தன்னையே கடவுள் என்று கூறி கொண்டு வந்தவர் தாதிமகராஜ் என்ற சாமியார். இந்த சாமியாரும் இவருடைய ஆண் சீடர்களும் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 25 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்த பெண்ணின் புகாரை அடுத்து டெல்லி போலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள மகளிர் அமைப்பினர் உடனே அந்த சாமியாரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், இந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் அந்த சாமியாருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.